Saturday, September 21, 2024

பக்கிங்காம் கால்வாயையொட்டி 6 புதிய பூங்காக்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு – சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

பக்கிங்காம் கால்வாயையொட்டி 6 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள 6 இடங்களில் புதிய பூங்காங்கள் அமைப்பது தொடர்பான விரிவான மதிப்பீட்டு அறிக்கையின்படி, ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி நாவலர் நகர், வாலாஜா சாலை, பாலாண்டியம்மன் கோவில் தெரு, சிங்காரவேலர் பாலம், பக்கிங்காம் கால்வாய் தெரு, மயிலாப்பூர் கெனால் பேங்க் ரோடு ஆகிய இடங்களில் 6 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தொடக்க பள்ளிகளிலும், நடுநிலை பள்ளிகளிலும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்குவதற்கு மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 211 மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 127 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024