Friday, September 20, 2024

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் பெட்ரோல் விலை குறைப்பு

by rajtamil
0 comment 34 views
A+A-
Reset

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான 'ஈத்-அல்-அதா' எனப்படும் பக்ரீத் பண்டிகை வரும் 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் அல்லது தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையானது இறைதூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதே போல் அதிவேக டீசல்(HSD) விலை லிட்டருக்கு ரூ.2.33 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அடுத்த 2 வாரங்களுக்கு விலை குறைப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.258.16 ஆகவும், ஒரு லிட்டர் அதிவேக டீசல் விலை 267.89 ஆகவும் குறைந்துள்ளது. பாகிஸ்தானில் பணவீக்கம் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெட்ரோல் விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024