பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! ஐடி, உலோகத் துறை பங்குகள் சரிவு!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (அக். 21) பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 73 புள்ளிகள் சரிந்தன. நிஃப்டி 25 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 73.48 புள்ளிகள் சரிந்து 81,151.27 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.090 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 72.95 புள்ளிகள் சரிந்து 24,781.10 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.29 சதவீதம் சரிவாகும்.

வணிக நேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 146 புள்ளிகள் சரிந்து 81,770.02 புள்ளிகளுடன் தொடங்கியது. அதிகபட்சமாக 80,811.23 புள்ளிகள் வரை இன்று சரிவைச் சந்தித்தது. மீண்டும் உயர்ந்து 81,770 என்ற பழைய நிலையையே அடைந்தது. வணிக நேரத் தொடக்கத்தில் 73 புள்ளிகள் சரிந்து 81,151.27 புள்ளிகளாக சென்செக்ஸ் நிறைவு பெற்றது.

வணிக நேரத் தொடக்கத்தில் டாடா நுகர்வு தயாரிப்புகள் 8% வரை சரிவைச் சந்தித்தது.

21 நிறுவனப் பங்குகள் சரிவு

பங்குச்சந்தை பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக எச்டிஎஃப்சி வங்கி நிறுவனப் பங்குகள் 2.79% உயர்வுடன் காணப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக ஏசியன் பெயின்ட்ஸ் 1.91%, எம்&எம் 1.15%, டெக் மஹிந்திரா 0.79%, ரிலையன்ஸ் 0.73%, மாருதி சுசூகி 0.59%, எல்&டி 0.22%, நெஸ்ட்லே இந்தியா 0.19%, என்டிபிசி 0.02% உயர்வுடன் காணப்பட்டன.

இதேபோன்று கோட்டாக் வங்கி -4.38%, பஜாஜ் ஃபின்சர்வ் -3.38%, இந்தஸ் இந்த் வங்கி -2.90%, அதானி போர்ட்ஸ் -2.15%, அல்ட்ராடெக் சிமெண்ட் -1.81%, பஜாஜ் ஃபைனான்ஸ் -1.72%, இன்ஃபோசிஸ் -1.43% சரிவுடன் காணப்பட்டன.

நிஃப்டி நிலவரம்

வணிக நேர தொடக்கத்தில் நிஃப்டி 24,956.15 புள்ளிகளுடன் தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து

24,978.30 என்ற இன்றைய உச்சத்தை பதிவு செய்தது. எனினும் வணிக நேர முடிவில் 72.95 புள்ளிகள் சரிந்து 24,781.10 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் ஆம்பர் எண்டர்பிரைசஸ் 17.40% உயர்ந்திருந்தன. இதனைத் தொடர்ந்து தேஜஸ் நெட்வொர்க்ஸ் 11.00%, டாடா கெமிக்கல்ஸ் 9.28%, பாம்பே பர்மா 4.36%, பஜாஜ் ஆட்டோ 4.34%, கிரிசில் 4.14%, கோதாவரி பவர் 3.98% உயர்ந்திருந்தன.

இதேபோன்று பிஎன்சி இன்ஃப்ராடெக் -20.00% சரிந்திருந்தன. மேலும், இந்தியாமார்ட் -16.75%, ஆர்பிஎல் வங்கி -14.19%, ஜேஎம் ஃபைனான்சியல் -7.34%, டாடா கன்சியூமர் -6.98%, மோதிலால் ஓஸ்வால் -6.36% சரிவுடன் காணப்பட்டன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024