Saturday, September 28, 2024

பட்ஜெட்டிற்கு கார்கே, சிதம்பரம் எதிர்ப்பு.. இந்தியா கூட்டணி அமளி

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

மத்திய பட்ஜெட்டிற்கு கார்கே, சிதம்பரம் எதிர்ப்பு.. இந்தியா கூட்டணி அமளி.. நாடாளுமன்றத்தில் பரபரப்புபட்ஜெட் விவாதம்

பட்ஜெட் விவாதம்

மத்திய பட்ஜெட்டில் பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதால் மாநிலங்களவையில் கடும் விவாதம் நடைபெற்றது.

மத்திய பட்ஜெட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியதுமே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், இரு அவைகளிலும் இருந்து வெளிநடப்பு செய்த இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற கட்டடத்தின் நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தினர். இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லை என்றால்…? நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில்

மாநிலங்களவையில் பட்ஜெட் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமான் எழுந்த போது, “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி, பிறகு அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேசிய நிதியமைச்சர், பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்பதற்காக, அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை எனவும், மக்களிடம் எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்புவதாகவும் ஆவேசமாக பேசினார்.

விளம்பரம்

இதையடுத்து, மக்களவையில் பிற்பகலில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், தமிழ்நாட்டை மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணித்ததாக சாடினார். இதே போல, மாநிலங்களவையில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பணவீக்கத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் மக்கள் மீண்டும் தண்டனை அளிப்பார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் தேர்தல் முடிந்ததால் தமிழையும், தமிழ்நாட்டையும் பாஜக மறந்துவிட்டதாக திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ மாநிலங்களவையில் விமர்சித்தார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
FINANCE MINISTER NIRMALA SITHARAMAN
,
Mallikarjun Kharge
,
P Chidambaram
,
Union Budget
,
Union Budget 2024

You may also like

© RajTamil Network – 2024