Wednesday, November 6, 2024

பட்ஜெட்டையொட்டி அரசுக்கு 7 கோரிக்கைகளை வைக்கும் ஊழியர்கள்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

பென்ஷன் முதல் அகவிலைப்படி வரை… பட்ஜெட்டையொட்டி மத்திய அரசுக்கு 7 கோரிக்கைகளை வைக்கும் ஊழியர்கள் சங்கம்…நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்த பட்ஜெட்டில், மத்திய அரசு ஊழியர் சங்கம், 8வது ஊதியக் குழுவை உடனடியாக உருவாக்குவது மற்றும் கோவிட்-19 காலகட்டத்தின் 18 மாத நிலுவைத் தொகையை விடுவிப்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவை அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு ஜூலை 6ஆம் தேதி அமைச்சரவை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், பட்ஜெட் 2024க்கு முன்னதாக பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவை பின்வருமாறு-

விளம்பரம்

  1. 8 ஆவது சம்பள குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

  2. புதிய பென்ஷன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பலன்களை வழங்கிட வேண்டும்.

  3. கொரோனா காலத்தில் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாதத்திற்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும்.

  4. கருணை நியமனங்கள் மீதான 5 சதவீத உச்சவரம்பை நீக்கி, இறந்த பணியாளரின் அனைத்து வார்டுகள்/ சார்ந்திருப்பவர்களுக்கு கருணை நியமனம் வழங்க வேண்டும்.

  5. அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியாளர்களின் பணியிடங்களையும் நிரப்புதல், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்ததாரரை நிறுத்துதல்.

  6. ஜேசிஎம் பொறிமுறையின் விதிகளின்படி சங்கம்/கூட்டமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை உறுதி செய்தல். நிலுவையில் உள்ள சங்கங்கள்/ கூட்டமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், தபால் குழு C யூனியன், NFPE, ISROSA ஆகியவற்றின் அங்கீகாரம் நீக்க உத்தரவுகளை திரும்பப் பெறுதல். சேவை சங்கம்/ கூட்டமைப்புகள் மீது விதி 15 1(c) விதிப்பதை நிறுத்துங்கள்.

  7. சாதாரண, ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் GDS ஊழியர்களை முறைப்படுத்துதல், தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு CG ஊழியர்களுக்கு சமமான அந்தஸ்து வழங்குதல்.

இதையும் படிங்க – பிரான்ஸின் உயரிய சிவிலியன் விருதை பெற்ற இந்திய தொழிலதிபர் ரோஷினி!

ஆகிய கோரிக்கைகள் தொழிற்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூலை 19 ஆம்தேதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

தற்போதுள்ள 7வது ஊதியக் குழு ஊழியர்களுக்கான DA உயர்வை செப்டம்பர் முதல் பாதியில் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. இது ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். வரவிருக்கும் DA உயர்வில் 3-4 சதவீதம் உயரும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Budget 2024
,
Government Employees

You may also like

© RajTamil Network – 2024