Sunday, September 29, 2024

பட்ஜெட் எதிரொலி: 3-வது நாளாக சரிந்த தங்கம் விலை

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு 3-வது நாளாக தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது.

சென்னை,

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை, சரிவை சந்தித்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ,275-ம், பவுனுக்கு ரூ,2 ஆயிரத்து 200-ம் குறைந்தது. இது தங்கம் விலை வரலாற்றில் இந்த அளவுக்கு குறைந்தது இதுவே முதல் முறை என்று வியாபாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை இறங்குமுகத்திலேயே இருந்ததை பார்க்க முடிந்தது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.51,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.6,490-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.89க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு 3-வது நாளாக தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3160குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் குறைவதற்கான வாய்ப்பே அதிகளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024