பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன; மத்திய மந்திரி குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

புதுடெல்லி,

பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இது, மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி குற்றம் சாட்டினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 23-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், நேற்று முன்தினம் தொடங்கியது.அதன் மீது பேசிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பட்ஜெட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர். பிரதமர் மோடி, பலவீனமான, ஆட்டம் காணும் அரசை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த ேபட்டியி்ல் கூறியதாவது:-தேர்தல் முடிவடைந்து விட்டது என்றும், கட்சி வேறுபாடுகளை கடந்து நாட்டுக்காக ஒன்றுசேர்ந்து பாடுபடுவோம் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். எனவே, நாட்டை வளர்ந்த நாடாக்குவதை நோக்கி நமது கவனம் இருக்க வேண்டும்.பட்ஜெட் மீது ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் பட்ஜெட் பற்றி எதுவுமே பேசவில்லை. விவாதத்தில் அரசியல் செய்கிறார்கள். பட்ெஜட்டில் உள்ள நல்ல அம்சங்கள் குறித்து பேசுவதற்கு பதிலாக, பிரதமர் மோடியை வசைபாடுகிறார்கள்.

முதலில், அவர்கள் மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். மக்கள் பிரதமர் மோடி 3-வது தடவையாக ஆட்சி செய்ய தீர்ப்பு அளித்துள்ளனர். எனவே, எதிர்க்கட்சி தலைவர்கள் செய்வது, மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் செயல். அதற்கு தேர்தலில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.சபையை அவமதிக்கும் வகையிலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் கண்ணியத்தை குறைக்கும்வகையிலும் நடந்து கொள்கிறார்கள்.சபையில் அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும், நாகரிகமாக விவாதம் நடத்த வேண்டும் என்றும் எம்.பி.க்களுக்கு குழு தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024