Wednesday, September 25, 2024

பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல்.. காவல்நிலையத்தில் நடந்த கொடுமை

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல்.. காவல்நிலையத்தில் நடந்த கொடுமை – அதிர்ச்சி சம்பவம்பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல்.. காவல்நிலையத்தில் நடந்த கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

மத்தியப் பிரதேசத்தில், கட்னி ரயில்வே காவல் நிலையத்தில் பூட்டிய கதவுகளுக்குப் பின் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கட்னி காவல் நிலைய பொறுப்பாளரான அருணா வாகனே என்பவர் வயதான பெண்ணை தலைமுடியைப் பிடித்து தடியால் அடித்து வெளுக்கிறார். பின் அச்சத்தில் மிரண்டபடி ஓரமாக நிற்கம் சிறுவனையும் தலைமுடியைப் பிடித்து இழுத்து சரமாரியாக அடிக்கிறார். அதன்பின் காவல்நிலையத்திற்குள் வரும் 3 பேர் சிறுவனைப் பிடித்து படுக்க வைத்து அவனது கால்களை இருவர் பிடித்துக் கொள்ள ஒருவர் தன் பலம் கொண்ட மட்டும் லத்தியால் பாதங்களில் அடிக்கிறார்.

விளம்பரம்

வலி பொறுக்க முடியாமல் கதறும் சிறுவனை முடியைப் பிடித்து இழுத்து தாக்குதலை தொடர்கிறது அந்த காவல்துறை கும்பல். கையெடுத்து கும்பிட்டு தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் அந்த சிறுவனை அவர்கள் விடவில்லை எனத் தெரிகிறது. கன்னத்தில் மாறி மாறி அறைந்து தொடர்ந்து துன்புறுத்துகின்றனர்.

இந்த திடுக்கிடும் வீடியோ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வீடியோ குறித்து ஜபல்பூர் போலீசார் விசாரித்த போது இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது என்பது தெரியவந்தது.

விளம்பரம்

இதில் தாக்குதலுக்குள்ளானவர்கள் பிரபல ரவுடி தீபக் வன்ஷ்கரின் உறவினர்கள் என்பதும் தெரியவந்தது. பட்டியலினத்தைச் சேர்ந்த வயதான பெண்ணையும், அவரது 15 வயது பேரனையும் போலீசார் தாக்குதலுக்கு உட்படுத்தியது ஏன்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தீபக் வன்ஷ்கர் மீது கட்னி ரயில்வே காவல் நிலையத்தில் 19 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2017 முதல் அவரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருட்டு வழக்கில் தலைமறைவான இவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்

Also Read :
நாட்டில் 46% மருத்துவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கின்றனர் – இந்திய மருத்துவர்கள் சங்கம்

அவரை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் தான் போலீசார் அவரது உறவினர்களைப் பிடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. தீவிர விசாரணைக்குப் பின் காவல் நிலைய பொறுப்பாளர் அருணா வாகனே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி, கடந்த ஜனவரி தரவுகளின்படி, 2022-ல் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் 57 ஆயிரத்து 428 ஆக உள்ளது. அது 2023-ல் அதிகரித்து 57 ஆயிரத்து 582 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Assault
,
boy
,
Madhya pradesh
,
police
,
Scheduled Castes

You may also like

© RajTamil Network – 2024