பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் வாழ்த்து!

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரீஸ் பாராலிம்பிக்ஸ்

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மேலும், இந்தப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த எஸ்ரா ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கமும், இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலமும் வென்றனர்.

ராகுலைச் சந்தித்த வினேஷ் போகத், புனியா! ஹரியாணா தேர்தலில் போட்டியா?

அமைச்சர் எல். முருகன் வாழ்த்து

இதுபற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் விளையாட்டு வீரரான மாரியப்பன் தங்கவேலு அவர்கள், பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம், 2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் மற்றும் தற்போது வெண்கலப் பதக்கம் என்று, தொடர்ச்சியாக இந்தியாவிற்காக பதக்கம் வென்று வரக்கூடிய தங்களது இந்த உறுதியான விளையாட்டுத் திறனைக் கண்டு, தமிழகமும் இந்தியாவும் பெருமையடைகிறது. வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய அணி சார்பில் பங்கேற்று பதக்கங்களைக் கைப்பற்றிய அஜீத்சிங், தீப்தி ஜீவன்ஜி, ஷரத் குமார் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

You may also like

© RajTamil Network – 2024