‘பயமறியா பிரம்மை’ படத்தின் டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி

by rajtamil
0 comment 30 views
A+A-
Reset

அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'.

சென்னை,

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பயமறியா பிரம்மை’. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்துள்ளார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பயமறியா பிரம்மை' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Excited to unleash the trailer of #BayamariyaBrammai,My best wishes to the team :)#BayamariyaBrammaiTrailer : https://t.co/Z23945NeNR@69mmfilmoffl@jagadishAKAJD@badappleanime@jaiviratra@nandyphotograph@pravsmith@invisibleart94@baro_n_d@harishuthaman@actorjohnvijay… pic.twitter.com/8ON8s1sMYd

— VijaySethupathi (@VijaySethuOffl) June 13, 2024

Original Article

You may also like

© RajTamil Network – 2024