Sunday, September 22, 2024

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் மீது பாய்ந்தது வழக்கு!

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

போலி சான்றிதழ் விவகாரம் : பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் மீது பாய்ந்தது வழக்கு!பூஜா கேட்கர்

பூஜா கேட்கர்

போலி சான்றிதழ் கொடுத்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பூஜா கேட்கர் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821 ஆவது இடம் பிடித்த பூஜா கேட்கர், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிகார துஷ்பிரயோகம் குறித்த புகாரின் பேரில் வாசிம் மாவட்டத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.

தந்தையின் வருமானத்தை மறைத்து, ஓபிசி இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியது, பார்வை குறைபாடு இருப்பதாக பொய்யான தகவலை அளித்ததாக பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவரது பயிற்சி நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லி காவல்துறையினர் பூஜா கேட்கர் மீது, மோசடி, ஏமாற்றுதல், ஐடி சட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணைம் அளித்த புகாரின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதனிடையே பூஜா கேட்கரிடம் விளக்கம் கேட்டு யுபிஎஸ்இ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கிரிமினல் வழக்குப்பதிவு செய்தல், தேர்வில் வெற்றி பெற்றதை ரத்து செய்வது குறித்து பதிலளிக்கும்படி தெரிவிக்கப்பட்டள்ளது.

இதையும் படிங்க:
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… மாஸ்டர் ஸ்கெட்ச் போட்டது யார்? – அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

இதற்கு அவர் அளிக்கும் பதிலை வைத்து, எதிர்காலத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
Karnataka

You may also like

© RajTamil Network – 2024