Sunday, September 22, 2024

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் பதவி பறிப்பு – ஏன் தெரியுமா?

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் பதவி பறிப்பு – ஏன் தெரியுமா?பூஜா கேத்கர்

பூஜா கேத்கர்

சர்ச்சையில் சிக்கிய புனேவைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் 821-வது ரேங்க் வாங்கியிருந்த பூஜா கேட்கர், புனே மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வந்தார். சைரனுடன் தனி கார், தனி அறை கேட்டு சர்ச்சையில் சிக்கினார்.

ஐஏஎஸ் தேர்விலும் சலுகைகளை பெற தனது குடும்ப வருமானத்தை மறைத்து ஓபிசி சான்றிதழ் வழங்கியது மற்றும் உடல் குறைபாடு கொண்டவர் என போலி ஆவணம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைத்து விசாரித்து வருகிறது.

விளம்பரம்

இதனிடையே, போலி ஆவணங்களை கொடுத்து ஐஏஎஸ் பணியில் சேர்ந்தது குறித்து பூஜா கேட்கர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி அனுப்பிய நோட்டீஸுக்கு பூஜா கேட்கர் பதிலளிக்கவில்லை.

இதையும் படிங்க: ஆயுள், மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியை திரும்பப் பெறுக – நிதியமைச்சருக்கு கட்கரி கடிதம்

இதையடுத்து, பூஜா கேட்கரின் பதவியை பறித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்வதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் குடிமைப் பணி தேர்வுகளை எழுதவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Pune

You may also like

© RajTamil Network – 2024