Monday, September 23, 2024

பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது தவறான உதாரணம்: நாராயண மூர்த்தி

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

குழந்தைகளை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது தவறான உதாரணம் என்று இன்ஃபோஸில் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் கூறுவதை கவனிக்க தவறும் மாணவர்களுக்கே பயிற்சி வகுப்புகள் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாராயண மூர்த்தி, அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம்! தீவிர சிகிச்சை

பயிற்சி வகுப்புகளுக்கு எதிர்ப்பு

அப்போது, பயிற்சி வகுப்புகள் குறித்து நாராயண மூர்த்தி பேசியதாவது:

“கல்வியின் உண்மையான நோக்கமானது, நிஜ உலகில் ஏற்படும் பிரச்னைகளை கவனித்து, பகுப்பாய்வு செய்வது போன்றவற்றை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். பயிற்சி வகுப்புகளை நம்பியிருப்பது, இந்திய கல்வி அமைப்பில் பெரிய சிக்கலை குறிக்கிறது. இது அர்த்தமற்ற, மனப்பாட கல்வியை முதன்மைப்படுத்துகிறது.

பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களில், பலர் வகுப்பறையில் ஆசிரியர் கூறுவதை கவனிக்காதவர்கள் ஆவர். ஏழைப் பெற்றோர்களால் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்ப முடியாது.

தற்போது, பயிற்சி துறையானது ரூ, 58,000 கோடி மதிப்பில் வளர்ந்துள்ளது. ஆண்டுக்கு 19-20 சதவீதம் வளர்ச்சியின் விகிதம் விரிவடைந்து வருகின்றது.

எனது தந்தை நேர மேலாண்மையை எனக்கு கற்றுக் கொடுத்தார். அதுதான், நான் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் நான்காவது இடம் பிடிக்க எனக்கு உதவியது” எனத் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024