Saturday, September 21, 2024

பரப்புரை முதல் காங்.,வேட்பாளர் வரை…பிரியங்கா காந்தி அரசியல் வரலாறு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

பரப்புரை முதல் காங்.,வேட்பாளர் வரை… பிரியங்கா காந்தியின் அரசியல் வரலாறு!பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை களமிறக்குவதன் மூலம் தேர்தல் அரசியலில் அறிமுகப்படுத்துகிறது காங்கிரஸ்.அரசியல் வருகை, அவரது செயல்பாடுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

அரசியலில் கால் பதிப்பது தொடர்பான கேள்விக்கு 1999ஆம் ஆண்டு பிரியங்கா காந்தி கூறிய அந்த “வெகு காலம்” கனிய இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கிறது.

இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய நேரு குடும்ப வாரிசான பிரியங்கா, முன்னாள் பிரதமரும், தனது பாட்டியான இந்திரா காந்தியின் தோற்றம் மற்றும் அவருக்குப் பிடித்த கைத்தறி புடவைகளின் ரசனையை கொண்டிருப்பதால் அவருடன் அடிக்கடி ஒப்பிடப்படுபவர். அரசியல் களத்தில் அதிக வசீகரமும், தெளிவும் மிக்கவராக இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் தீவிர அரசியலில் சேருவதற்கான திட்டங்களை அவர் தவிர்த்து வந்தார்.

விளம்பரம்

இருப்பினும் தாய் சோனியாவின் ரே பரேலி மற்றும் அமேதி தொகுதிகளுக்கு தொடர்ந்து விஜயம் செய்ததன் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து மக்களிடையே மிகப் பிரபலமானார். இதைத்தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியின் அறிமுகத்தின்போது அரசியலில் தனது முதல் அடியை பிரியங்கா எடுத்து வைத்தார். அமேதியில் ராகுலுக்காகவும், ரேபரேலியில் சோனியாவுக்காகவும் பரப்புரையில் ஈடுபட்டார்.

2007 உத்தரப் பிரதேசத் தேர்தலில் கட்சி உட்பூசல்களைச் சமாளிப்பதிலும் கவனம் செலுத்தினார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பெரும்பாலும் தேர்தல் பரப்புரைகளில் மட்டும் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டார். 2019ஆம் ஆண்டு ஜனவரியில் உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது பிரியங்கா முறையாக தீவிர அரசியலில் நுழைந்தார். தொடர்ந்து அடுத்தாண்டு செப்டம்பரில் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

விளம்பரம்

காவல்துறையின் தடுப்புகளை தாண்டி உன்னாவ் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தது அவரது அரசியல் நிலைப்பாட்டை ஓங்கி உரைத்தது.

2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்தான் அவர் வகித்த முதல் பெரிய பொறுப்பு. தனித்து நின்று வெற்றி பெறலாம் என பிரியங்கா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. 399 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இரண்டு இடங்களை மட்டுமே வென்றது.

டிசம்பர் 2023-ல் கட்சி மறுசீரமைக்கப்பட்ட பிறகு, பிரியங்கா காந்தி தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கட்சியின் வியூகங்களை வகுப்பதில் முக்கியப் பங்காற்றினார். காங்கிரஸின் மிகவும் வெளிப்படையான முகங்களில் ஒருவராகவும் காண முடிந்தது. காங்கிரஸின் திட்டங்கள் பெண்களின் தாலியை பறிக்கும் என பிரதமர் மோடி பேசியதற்கு பிரியங்காவின் அளித்த பதில் மக்களை கவர்ந்தது.

விளம்பரம்

உத்தரப் பிரதேசத்தில் ​​காங்கிரஸ் பிரசாரத்தை பிரியங்கா வழிநடத்தியதன் மூலம் அமேதி, ரே பரேலி ஆகிய இரண்டு கோட்டைகளை கைப்பற்றியதுடன் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க :
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை! – தமிழ்நாடு அரசு ஆணை!

கேரளவின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில், பிரியங்கா காந்தியை தவிர வேறு ஒருவரை வேட்பாளராக அறிவித்திருந்தால் இந்தியா கூட்டணியில் அதிருப்தி அதிகரித்து இருக்கும். ஆனால் ராகுலிடம் தோற்ற CPI வேட்பாளர் ஆன்னி ராஜாவே வரவேற்றுள்ளார்.
வயநாட்டில் பிரியங்கா வென்றால் காங்கிரஸ் கட்சி மேலும் வலுப்பெறும் என்பதும், நாடாளுமன்றத்தில் காங்கிஸின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்து எழாது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Priyanka Gandhi

You may also like

© RajTamil Network – 2024