பராமரிப்புப் பணி: கோவை – சென்னை ரயில் பகுதியாக ரத்து

by rajtamil
Published: Updated: 0 comment 16 views
A+A-
Reset

சென்னை, அரக்கோணம் அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கோவை – சென்னை ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பராமரிப்பு பணி காரணமாக கோவை – சென்னை ரயில் (எண்:12680) செப்டம்பா் 1-ஆம் தேதி கோவை – காட்பாடி இடையே மட்டும் இயக்கப்படும். காட்பாடி – சென்னை இடையே இயக்கப்படாது. இதேபோல, சென்னை – கோவை ரயில் (எண்: 12679) காட்பாடி – கோவை இடையே மட்டும் இயக்கப்படும். சென்னை – காட்பாடி இடையே இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024