பராமரிப்பு பணி.. திருப்பதி கோவிலின் தெப்பக்குளம் ஒரு மாதம் மூடப்படுகிறது

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

புஷ்கரணியில் உள்ள தண்ணீர் மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு, படிக்கட்டுகள், தடுப்பு கம்பி வேலிகள், தளம் ஆகியவை சீரமைக்கப்பட உள்ளன.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக, தெப்பக்குளத்தை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். இந்த பணிகள் முடியும் வரை தெப்பக்குளம் மூடப்படும்.

அவ்வகையில் இந்த ஆண்டு தூய்மைப் பணி மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு கோவில் தெப்பக்குளம் (சுவாமி புஷ்கரணி) மூடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புஷ்கரணியில் உள்ள தண்ணீர் மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட உள்ளது. தண்ணீரை வெளியேற்றியதும், படிக்கட்டுகள், தடுப்பு கம்பி வேலிகள், தளம் ஆகியவை சீரமைக்கப்பட உள்ளன.

சேறுகளை அகற்றுதல், குப்பைகளை வெளியேற்றுதல், சேதமடைந்த பகுதிகளை சரி செய்தல், படிக்கட்டுகளை சீரமைத்து வர்ணம் பூசுதல், குழாய்களுக்கு பெயிண்ட் அடித்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் மாலை நேரத்தில் புஷ்கரணி ஆரத்தி நடப்பது வழக்கம். இப்போது பராமரிப்பு பணிகளுக்காக தெப்பக்குளம் 1-ம் தேதி முதல் மூடப்படுவதால் ஒரு மாதத்துக்கு புஷ்கரணி ஆரத்தி ரத்து செய்யப்படுகிறது

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024