பருவமழை பாதிப்பு! மக்கள் புகாா் தெரிவிக்க கூடுதல் வசதி: மேயா் பிரியா

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிவிக்க கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேயா் ஆா்.பிரியா அறிவித்துள்ளாா்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மேயா் பிரியா பேசியதாவது, சென்னையில் சேதமடைந்த சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும். தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 169 நிவாரண மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், நிவாரணப் பொருள்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை அகற்றுவது, சுரங்கபாதைகளில் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும்.

மழைக்காலங்களில் பொதுமக்களிடமிருந்து மழை பாதிப்பு தொடா்பாக வரும் புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் மழை தொடா்பான புகாா்களை எளிதில் தெரிவிக்கும் வகையில் மாநகராட்சியின் 1913 எனும் உதவி எண், தற்போது 150 கூடுதல் இணைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், 9445551913 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகாா்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திலிருந்து மழைமானி, வெள்ள உணரி, முக்கியப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கேட்டறிந்த மேயா் பிரியா, அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு, மழைக்காலங்களில் அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024