Friday, September 20, 2024

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்திடுக – சீமான் வலியுறுத்தல்

by rajtamil
0 comment 64 views
A+A-
Reset

இழந்த சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இனியாவது காலம் கடத்தாமலும், ஊழலின்றியும் அரசு ஈடுபட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பள்ளிக்கரணை (பெரும்பாக்கம்) சதுப்பு நிலப்பகுதியில் நேற்று (30.05.2024) ஏற்பட்ட காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதை உறுதி செய்வதோடு பொதுமக்களையும், சூழலியலையும் பாதுகாத்திட துரித நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.

சதுப்புநிலப் பகுதிகளும், பறவைகளின் உறைவிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வரும் நிலையில், இக்காட்டுத்தீயிற்கானக் காரணிகளைக் கண்டறிய வலியுறுத்துகிறேன். குப்பை மேட்டின் தன்மை போன்ற மானுடவியல் காரணிகளாக இருப்பின் போர்க்கால அடிப்படையில் அரசு எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று பொதுமக்கள் உற்று நோக்க வேண்டுகிறேன். பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் மற்றும் அருகாமையில் இருக்கக்கூடியக் குப்பைக்கிடங்கிலிருந்து வெளியேறும் வேதிமப்பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகள் குறித்துத் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இழந்த சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இனியாவது காலம் கடத்தாமலும், ஊழலின்றியும் அரசு ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024