Monday, September 23, 2024

பள்ளி வாட்ஸ்ஆப் குழுவில் விநாயகர் சதுர்த்தி பதிவை நீக்கிய இஸ்லாமிய தலைமையாசிரியர் கைது!

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

ராஜஸ்தானில் அரசு பள்ளி வாட்ஸ்ஆப் குழுவில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துப் பதிவை நீக்கியதாகக் கூறி இஸ்லாமிய தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்திலுள்ள லாதுரி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் ஷஃபி முகமது அன்சாரி. இவர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இருக்கும் பள்ளியின் வாட்ஸ்ஆப் குழுவில் விநாயகர் சதுர்த்திக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்திகளைக் குழுவிலிருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் அன்சாரியை பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரி பள்ளியின் முன் திரண்டுள்ளனர்.

அன்பு, பணிவு, மரியாதை… இந்திய அரசியலில் இல்லை: ராகுல் காந்தி பேச்சு!

இந்த சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிவித்த அந்தப் பகுதியின் துணை காவல் கண்காணிப்பாளர் நரேந்திர நாடார், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு எனும் வாட்ஸ்ஆப் குழுவில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அனுப்பிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை அன்சாரி நீக்கியதாகவும், சிறிது நேரம் கழித்து ஆசிரியர் ஒருவர் அனுப்பிய வாழ்த்தையும் அவர் நீக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மத நல்லிணக்கத்தை அன்சாரி சீர்குலைப்பதாகக் கூறி கிராமத்தினர் அந்தப் பள்ளியின் முன் திரண்டு அவரை பதவியிலிருந்து நீக்குமாறு கூறி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அங்கு விரைந்து போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சொல்லப் போனால்… ஆளைக் கொல்கிறார்கள், கட்டடத்தை இடிக்கிறார்கள்… சட்டம் யார் கையில்?

இதன் பின்னர், மதநல்லிணக்கத்தை சீகுலைத்ததாகக் கூறி பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா பிரிவு 127-ன் கீழ் அன்சாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டு கைது செய்யப்பட்ட மாலையே அன்சாரி விடுதலை செய்யப்பட்டார். தற்போது கிராமத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024