Tuesday, September 24, 2024

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்கல்லாதவன் நுட்பம் கண்டறிய முடியாததுபழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்;

'நல்லேம் யாம்' என்று ஒருவன் நன்கு மதித்தல் என்?

சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,

சொல்லாக்கால் சொல்லுவது இல். (பாடல்: 367)

கல்லாதவன் தான் ஒரு நுட்பத்தைக் கண்டறிந்துவிட்டதாக அறிஞர் அவையில் நிறுவுதல் எளிதன்று, அரிது. அவையினரைக் கொடும் சொற்களால் அடக்கியும், சினமுற்றும், சண்டையிட்டும் நடந்துகொள்ளும் கல்லாதவர், "நான் மிக நல்லவன்' என்று தனக்குத்தானே பாராட்டிக் கொள்வது எதற்காக? சொல் வன்மை என்பது பயிற்சியால் வருவது. கல்லாதோர்க்கு அது அமையாது.

You may also like

© RajTamil Network – 2024