பழிவாங்கும் கருத்துகளைக் கூறி வருகிறார் மமதா: ஒடிசா முதல்வர்!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

கடலோர மாநிலம் குறித்து எதிர்மறை மற்றும் வெறுக்கத்தக்க கருத்துகளைக் கூறியதற்காக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி கடுமையாகச் சாடினார்.

அமெரிக்காவில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கொடூரமான குற்றத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்காமல் பானர்ஜி "பழிவாங்கும்" கருத்துகளைக் கூறுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

வங்காளத்திற்கு தீ வைக்கப்பட்டால் அசாம், வடகிழக்கு, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் தில்லி ஆகியவையும் பாதிக்கப்படும் என்று டிஎம்சி மாணவர் பிரிவு பேரணியில் உரையாற்றிய பானர்ஜி கூறினார்.

‘வாழ்வதைவிட சாவதே மேல்’ – வங்கதேச பத்திரிகையாளர் மரணத்தால் பதற்றம்!

ஒடிசா அமைதியான மாநிலம், அதன் மக்கள் பொறுப்புள்ளவர்கள். ஒடிசாவைப் பற்றி எதிர்மறையான, பிளவுபடுத்தும் உணர்ச்சியற்ற கருத்துகளைச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மாநிலத்தைப் பற்றி வெறுக்கத்தக்க, எதிர்மறையான கருத்து மற்றும் உணர்ச்சியற்ற அணுகுமுறையை ஏற்கமாட்டார்கள் என்று மாஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கொடூரமான குற்றத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்காமல், பழிவாங்கும் வகையில் நீங்கள் கூறும் கருத்துகள் நாட்டுக்கு ஆபத்தானவை. இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்து, அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மமதா பானர்ஜி ஒரு பெண்ணாக இருப்பதால், தனது மாநிலத்தில் உள்ள பெண்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டார். பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்காமல், இன்று நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். இந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது, மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று மஜி கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024