பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம்: பாதுகாப்பு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம்: பாதுகாப்பு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி போராட்டங்கள் முன்னெடுக்க அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்சம் மேளனத்தின் சார்பில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

கடந்த 2003-ம் ஆண்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2004 ஜன. 1-ம் தேதிமுதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் போராடி வருகிறது.

பரிந்துரைக்க மறுப்பு: இந்நிலையில், கடந்த ஆண்டுஆக.8-ம் தேதி டெல்லியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பழையஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத் தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, மத்திய அரசு நிதித் துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் கமிட்டி அமைத்தது. ஆனால், அந்தக் கமிட்டி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிந்துரைக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதையடுத்து, அக்கமிட்டியை பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் புறக்கணித்தது. இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கடந்த ஆக.24-ம் தேதி மத்திய அரசு தன்னிச்சையாக அறிவித்தது. புதிய ஓய்வூதியத் திட்டம்மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதி யத் திட்டம் ஆகிய இரண்டுமே ஊழியர் விரோத திட்டங்கள் ஆகும்.

உறுதிமொழி ஏற்பு: இத்தகைய சூழ்நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்து, அதன் முதற்கட்டமாக காந்தி ஜெயந்தி தினத்தன்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஆவடியில் உள்ள ஓசிஎஃப் தொழிற்சாலை முன்பாக அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார், தொமுச பொதுச் செயலாளர் முகமது மீரா, எச்விஎஃப் தொழிற் சாலை முன்பு சங்கத்தின் தலைவர் முரளிதரன், பொதுச் செயலாளர் முத்துக்கருப்பன், செயற்குழு உறுப்பினர்கள் விஜயசீலன் மற்றும் தொழிலாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024