திருவனந்தபுரம்,
கடந்த மாதம் திருச்சூரில் இருந்து கோழிக்கோடுக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அரசு பஸ் டிரைவர் பேருந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாய், சேய் என இரண்டு உயிர்களை காப்பாற்றினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த பயனர்கள், துரிதமாக செயல்பட்ட அரசு பஸ் டிரைவரை பாராட்டினர்.
இந்நிலையில், கேரளாவில் மீண்டும் பஸ் நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் பஸ்சில் பயணிகளுக்கு பயணச்சீட்டை வழங்கும் பணியில் நடத்துனர் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் பஸ்சில் ஏறிய வாலிபர் ஒருவர் உள்ளே செல்லாமல் படிக்கட்டுக்கு நேராக பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டு பயணச்சீட்டை வாங்கிக்கொள்கிறார். அப்போது வேகமாக சென்றுகொண்டிருந்த பஸ்சில் இருந்து அந்த பயணி திடீரென கீழே விழப்பார்த்தார். அப்போது லாவகமாக நடத்துனர் பயணியின் கையை பிடித்து மேலே இழுத்து அவரது உயிரை காப்பாற்றினார்.
பேருந்தில் இருந்து கீழே தவறி விழச் சென்றவரை, மின்னல் வேகத்தில் காப்பாற்றிய நடத்துநர்!#Bus#Conductor#Passenger#dailythanthipic.twitter.com/ZSry0zofWr
— DailyThanthi (@dinathanthi) June 7, 2024