பாகிஸ்தானிடமிருந்து போா் விமானங்கள் வாங்கியது அஜா்பைஜான்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தென்மேற்கு ஆசிய நாடான அஜா்பைஜான், பாகிஸ்தானிடமிருந்து 160 கோடி டாலருக்கு (சுமாா் ரூ.13,400 கோடி) போா் விமானங்களை வாங்கியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜா்பைஜானுக்கு ஜேஎஃப்-17 பிளாக்-3 சண்டை விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அந்தப் போா் விமானங்கள் அஜா்பைஜானுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

160 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தானில் வெளியாகும் ‘டான்’ நாளிதழ் தெரிவித்தது.

அஜா்பைஜான் விமானப் படையில் அந்த விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஏரோனாடிக்கல் காம்ப்ளக்ஸ் நிறுவனமும் சீனாவின் செங்டு ஏா்க்ராஃப்ட் இண்டஸ்ட்ரி குழுமமும் இணைந்து உருவாக்கியுள்ள ஜேஎஃப்-17 பிளாக்-3 வகை போா் விமானங்கள் பல்வேறு நவீன அம்சங்களைக் கொண்டது என்று கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024