Saturday, September 21, 2024

பாகிஸ்தானில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பிச்சைக்காரர்

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தற்போது பொருளாதார ரீதியில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது. இதற்காக உலக நாடுகள் மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து நிதியுதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்நாட்டில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டுமென்றால் கூட அதிக விலையை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனினும் இவ்வுளவு பணவீக்கத்திற்கு மத்தியிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரை சேர்ந்தவர் ஷவுகத். பணக்கார பிச்சைக்காரரான இவர், தெருத்தெருவாக உணவிற்காகவும் பணத்திற்காகவும் ஒவ்வொரு நபரிடமும் கையேந்தி பிச்சை எடுத்து வருகிறார். இவர் தனது குழந்தைகளை நாட்டின் மிகப்பெரிய பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். அவர்களுக்கு ரூ.1 கோடி அளவிற்கு காப்பீடும் எடுத்துள்ளார். இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வங்கி கணக்கில் ரூ.17 லட்சம் பணம் இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வரி வசூலிக்கும் நிறுவனமான பெடரல் போர்டு ஆப் ரிவென்யூ கூறியுள்ளது. பிச்சையெடுப்பதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் ரூ.1000 இவர் சம்பாதித்து விடுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இவர் தனிப்பட்ட ரீதியாக தனது நிதி நிலைமை குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024