பாகிஸ்தானில் நுழைந்து கைதான இந்திய பெண், மகனுடன் எல்லைகாவல் படையிடம் ஒப்படைப்பு

by rajtamil
0 comment 46 views
A+A-
Reset

பாகிஸ்தான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இந்திய பெண் மற்றும் அவரது மகன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

லாகூர்,

அசாமின் நாகான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாகிதா பேகம். இவர் தனது மகன் சிறுவன் பாயிஸ் கானுடன், ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குயிட்டா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் சிறை தண்டனை காலம் முடிவடைந்ததும், அவர்களை பாகிஸ்தான் அரசு, இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் புதன்கிழமை வாகா எல்லையை கடந்து இந்திய எல்லை காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வாகிதா, ராணுவ அதிகாரிகளிடம் கூறும்போது, "எனது கணவர் இறந்ததும் கனடா செல்ல முடிவு செய்தேன். ஒரு இந்திய ஏஜெண்ட் எங்களை ஏமாற்றி ஆப்கானிஸ்தானில் விட்டுச் சென்றுவிட்டார். அங்கு எனது பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு அனுப்பினர். நாங்கள் நடைபயணமாக வந்தபோது பாகிஸ்தான் அதிகாரிகள் எங்களை பாகிஸ்தானில் நுழைந்ததாக கைது செய்தனர்" என்று தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024