பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று (அக்டோபர் 14) அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 4 ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் விராட் கோலியை மதிப்பிட தேவையில்லை: கௌதம் கம்பீர்

ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 14) அறிவித்துள்ளது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் ஜோஸ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Our ODI squad to take on Pakistan next month is locked pic.twitter.com/5ny05yP5gS

— Cricket Australia (@CricketAus) October 14, 2024

ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்பாட், கூப்பர் கன்னோலி, ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, ஜோஸ் ஹேசில்வுட், ஜோஸ் இங்லிஷ், மார்னஸ் லபுஷேன், கிளன் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரர் இல்லை!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் விவரம்

முதல் ஒருநாள் போட்டி – நவம்பர் 4, மெல்போர்ன்

2-வது ஒருநாள் போட்டி – நவம்பர் 8, அடிலைடு

3-வது ஒருநாள் போட்டி – நவம்பர் 10, பெர்த்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024