பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்துவிட்டது: ஜெய்சங்கர்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஜெய்சங்கர் பேசியதாவது:

பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவுகள் உள்ளன. ஜம்மு-காஷ்மீரை பொருத்தவரை, அந்த யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது சட்டப் பிரிவு முடிந்துபோன விவகாரமாகும். எனவே இனி பாகிஸ்தானுடன் என்ன மாதிரியான உறவைப் பராமரிக்கலாம் என்பதே தற்போதைய கேள்வி.

பாகிஸ்தான் உடனான உறவைப் பொறுத்தவரை, தற்போதுள்ள நிலையை தொடர்வதில் இந்தியா திருப்தி அடையலாம் என்று ராஜீவ் சிக்ரி தனது புத்தகத்தில் பரிந்துரைத்துள்ளார். சில நேரங்களில் ஆம் என்றும், சில நேரங்களில் இல்லை என்றும் இதற்கு பதில் சொல்லலாம். அமைதியாக இருப்பவர்கள் அல்ல நாங்கள். நிகழ்வுகள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம்" என்றார்.

You may also like

© RajTamil Network – 2024