பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக் கொள்ளவில்லை – பிரதமர் மோடி

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

கடந்தகால வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக் கொள்ளவில்லை – பிரதமர் மோடிமோடி

மோடி

கடந்தகால வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக் கொள்ளவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கார்கில் போரின் 25 ஆம் ஆண்டு வெற்றி தின கொண்டாட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதையொட்டி லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம் என குறிப்பிட்டார். இந்தியா மீதான தாக்குதல்களை பாகிஸ்தான் இன்றும் மறைமுகமாக தொடர்ந்து வருவதாக குற்றம்சாட்டிய மோடி, அனைத்து விதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் முறியடிப்போம் எனவும் தெரிவித்தார்.

விளம்பரம்

#WATCH | Ladakh: PM Narendra Modi says, “Be it Ladakh or Jammu and Kashmir, India will defeat every challenge that comes in the way of development. In a few days, on August 5, it will be 5 years since Article 370 was abolished. Jammu and Kashmir is talking about a new future,… pic.twitter.com/Iss2H6B5XO

— ANI (@ANI) July 26, 2024

விளம்பரம்

கடந்த காலங்களில் நடத்திய அனைத்து கொடூரத் தாக்குதல்களிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது என்றும், ஆனால் வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று பிரதமர் கூறினார். பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதை பாகிஸ்தான் தன்னுடன் வைத்துக்கொள்ள முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இதன் பின்னர் 4.1 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையான ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

#WATCH | Ladakh: Prime Minister Narendra Modi virtually carries out the first blast of the Shinkun La Tunnel project
Shinkun La Tunnel Project consists of a 4.1 km long Twin-Tube tunnel which will be constructed at an altitude of around 15,800 feet on the Nimu – Padum – Darcha… pic.twitter.com/ISobHEhkzl

— ANI (@ANI) July 26, 2024

விளம்பரம்

இதனிடையே, லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் கார்கில் போர் நினைவிடத்தில் இந்திய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

விளம்பரம்

இந்திய கடற்படை தளபதி தினேஷ்குமார் திரிபாதியும், கார்கில் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் இந்திய விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரியும் அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: Paris Olympics | பாரிஸில் இன்று தொடங்குகிறது 33 வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள்

கார்கில் போர் நினைவிடத்தில் முப்படை அதிகாரிகளும், கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Kargil War
,
Modi
,
Pakistan Army

You may also like

© RajTamil Network – 2024