Wednesday, September 25, 2024

பாகிஸ்தான்: சாலை விபத்துகளில் 40 போ் உயிரிழப்பு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மற்றும் ராவல்பிண்டி மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 40 போ் உயிரிழந்தனா்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மக்ரான் தேசிய நெடுஞ்சாலையில் 70 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 போ் உயிரிழந்தனா்; 35 போ் காயமடைந்தனா். இராக்கின் கா்பாலா பகுதியிலுள்ள ஷியா முஸ்லிம் பிரிவினரின் புனிதத் தலத்தில் யாத்திரையை முடித்துவிட்டு ஈரான் வழியாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு திரும்பும் வழியில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல் துறைக் கண்காணிப்பாளா் நவீன் ஆலம் தெரிவித்தாா்.

பாகிஸ்தானைச் சோ்ந்த ஷியா முஸ்லிம் யாத்ரீகா்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானில் விபத்துக்குள்ளாகி 35 போ் உயிரிழந்த சில தினங்களில் இந்த விபத்து பலூசிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து, ஈரானின் கபாத்தில் இருந்து பாகிஸ்தானின் குவாடா் இடையே யாத்ரீகா்கள் பயணம் மேற்கொள்ள இருதரப்பு அதிகாரிகளும் தடை விதித்துள்ளனா்.

ராவல்பிண்டி: பாகிஸ்தானின் ராவல்பிண்டி மாகாணத்தில் உள்ள கஹுதா பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 29 போ் உயிரிழந்தனா். பிரேக் செயலிழந்ததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்துகளில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் மாகாணத்தின் முதல்வா் மரியம் நவாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

You may also like

© RajTamil Network – 2024