Friday, September 20, 2024

பாஜகவில் புதிய செயல் தலைவர் பதவி – ஜெ.பி.நட்டாவிற்கு பணிச்சுமைகுறைப்பு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

பாஜகவில் புதிய செயல் தலைவர் பதவி – ஜெ.பி.நட்டாவிற்கு பணிச்சுமை குறைப்பு.. பிரதமர் மோடி, அமித்ஷா முக்கிய ஆலோசனை!பாஜகவிற்கு புதிய செயல் தலைவர்

பாஜகவிற்கு புதிய செயல் தலைவர்

ஜெ.பி.நட்டாவின் பணி சுமையை குறைக்கும் நோக்கில், பாஜகவின் தேசிய செயல் தலைவரை ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்வு செய்ய அக்கட்சி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை அவர் பணியில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மோடியின் புதிய அமைச்சரவையில் ஜெ.பி.நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பாஜகவின் தேசிய தலைவருக்கான தேர்தலை அடுத்தாண்டு ஜனவரி வரை நடத்த திட்டமில்லை என்று கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
திமுகவிற்கு எதிராக பேசிய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்… விளக்கம் கேட்டது டெல்லி கட்சி மேலிடம்!

எனவே, நட்டாவின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில், ஆகஸ்ட் இறுதிக்குள் செயல் தலைவரை தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜெ.பி.நட்டா மற்றும் பாஜக பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ் கலந்து கொண்டனர். 2 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், மோடியும் அமித்ஷாவும் தனியாக ஆலோசித்தாக கூறப்படுகிறது. எனவே, விரைவில் பாஜகவின் தேசிய செயல் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Amit Shah
,
JP Nadda
,
PM Modi

You may also like

© RajTamil Network – 2024