பாஜக ஆளும் மாநிலங்களை விட தில்லியில் ஊதியம் அதிகம்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

பாஜக ஆளும் மாநிலங்களை விட தில்லியில் குறைந்தபட்ச ஊதியம் அதிகம் என அம்மாநில முதல்வர் அதிஷி இன்று (செப். 25) தெரிவித்தார்.

தில்லியில் செய்தியாளர்களுடன் அதிஷி பேசியதாவது,

''நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதிய அளவை எடுத்துக்கொண்டு ஒப்பிட்டுப்பார்த்தால் தில்லி அரவிந்த் கேஜரிவால் அரசு வழங்கும் குறைந்தபட்ச ஊதியம் அதிகம் என்பது தெரியும்.

ஏழை மக்களின் உழைப்புச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தில்லி மக்களுக்கு வரலாறு காணாத அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை அரசு வழங்குகிறது.

பாஜக ஏழை மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்படுகிறது. இதனை இரு வழிகளில் நாம் பிரித்தறிய முடியும்.

2016 – 2017 ல் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தலாம் என்ற அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசின் கோரிக்கைக்கு பாஜக முட்டுக்கட்டையிட்டது.

பின்னர் நீதிமன்றத்தை நாடி, இதற்கான உத்தரவைப் பெற்று, குறைந்தபட்ச ஊதியத்தை கேஜரிவால் அரசு உயர்த்தியது. பாஜக இதனைக் கடுமையாக எதிர்த்தது. ஆனால், கேஜரிவால் அரசு கடுமையாகப் போராடி, சாமானிய மக்கள் நலனுக்கான இதனைக் கொண்டுவந்தது.

படிக்க | மீண்டும் வேளாண் சட்டங்கள்? – காங்கிரஸ் எதிர்ப்பு! மன்னிப்பு கேட்டார் கங்கனா

பாஜக ஆளும் மாநிலங்களில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதிய அளவை ஒப்பிட்டுப்பார்த்தால், அது தில்லி அரசு வழங்கும் குறைந்தபட்ச ஊதியத்தின் பாதி மதிப்பே இருக்கும். பாஜக அரசு குறைந்த ஊதியத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தில்லி வழங்கும் ஊதியத்தின் அளவையும் குறைக்க முயற்சித்தது. ஆனால், தில்லி மக்கள் நலனுக்காக குறைந்தபட்ச ஊதியத்தை கேஜரிவால் அரசு உயர்த்தியது'' எனக் குறிப்பிட்டார்.

You may also like

© RajTamil Network – 2024