Tuesday, September 24, 2024

பாஜக உறுப்பினர் சேர்க்கை: இளம்பருவத்தினரே நமது இலக்கு -பிரதமர் மோடி

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

பாஜகவின் தேசிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த பின் தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டார் பிரதமர் மோடி.

பாஜகவின் தேசிய உறுப்பினர் சேர்க்கை 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. பாஜகவின் தேசிய உறுப்பினர் சேர்க்கையில், புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைத்துக்கொள்ளப்படுவர். அத்துடன், ஏற்கெனவே கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் தங்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்துக்கொள்வர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை(செப். 2) புதுதில்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். அவருக்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ. பி. நட்டா உறுப்பினர் அட்டையை வழங்க, பிரதமர் பெற்றுக்கொண்டார்.

அதன்பின் பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் எல்லைப்புற கிராமங்களை பாஜகவின் கோட்டையாக மாற்ற வேண்டுமென பாஜக உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

”10 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஊழல்கள் குறித்து, புதிய தலைமுறையினர் அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில், பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடும்போது, 18 முதல் 25 வயது பருவத்தினரை குறிவைத்து அவர்களை கட்சியில் உறுப்பினர்களாக இணைக்க வேண்டும்” என பிரதமர் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

”‘தேச நலனும் மக்களின் நலனும்’ ஆகிய இவ்விரு பாஜகவின் சித்தாந்தங்களே, எளிமையான கட்சியாக ஆரம்பக்கட்டத்திலிருந்த பாஜகவை, வளர்ச்சியடையச் செய்துள்ளது. பாஜக உறுப்பினர் சேர்க்கையைப் பொருத்தவரையில், எத்தனை உறுப்பினர்களைக் கட்சியில் இணைக்கப் போகிறோம் என்பதைவிட, ஒரு சித்தாந்தம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பிரசாரம் இது” என்றார்.

You may also like

© RajTamil Network – 2024