Saturday, September 28, 2024

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்னும் ஒரிரு மாதங்களில் அவர் இங்கிலாந்து சென்று, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் 4 மாதங்கள் அரசியல் தொடர்பான படிப்பை படிக்க உள்ளார்.

இந்நிலையில், அண்ணாமலை நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில், அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மாநிலத் தலைவர்கள் சிலருடன் கட்சியின் தேசியத் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தப் பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்க இருப்பதாகவும், அப்போது அண்ணாமலையுடன் தமிழக பாஜக நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசிக்க இருப்பதாகவும் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024