Sunday, October 27, 2024

பாட் கம்மின்ஸ் பகிர்ந்த மறக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மறக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் சிறந்த ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பகிர்ந்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கானத் தொடர் வருகிற நவம்பர் மாதம் தொடங்குகின்றது. அதற்கு முன்னதாக இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தியா ஏ அணிக்கு எதிரான இரண்டு வார்ம்-அப் போட்டிகளிலும் விளையாடவிருக்கிறது.

பாக். சுழலில் சிக்கிய இங்கிலாந்து: 267 ரன்களுக்கு ஆல் அவுட்!

இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடிய வீரர்களின் மறக்கமுடியாத ஆட்டங்கள் பற்றி தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “2004 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் 241 ரன்கள் விளாசியதை தனது வாழ்வில் மறக்க முடியாத சிறப்பான ஆட்டம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காபாவில் நடந்த டெஸ்ட்டில் ரிஷப் பந்தின் 89 ரன்கள், 2001 ஆம் ஆண்டு விவிஎஸ் லக்‌ஷ்மண் விளாசிய 281 ரன்கள், அடிலெய்டில் விராட் கோலியின் 141 ரன் ஆட்டங்களை தவிர்த்துவிட்டு சச்சினின் ஆட்டம் சிறப்பானது என்று கூறியுள்ளார்.

அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்; தொடக்க ஆட்டக்காரர் இடம் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் கருத்து!

மேலும் அவர் கூறுகையில், “241* ரன்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. அவரை யாராலும் விக்கெட் எடுக்க முடியவில்லை. இந்திய அணி 705* ரன்கள் அடித்து டிக்ளேர் செய்த போதும் அவர் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். அது சலிப்பாக இருந்தது. இருந்தாலும் அது மறக்கமுடியாத ஆட்டம்” என்றார்.

2020-2021 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரின் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் 89 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

கொல்கத்தாவில் 2001 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் பாலோ ஆன் ஆன இந்திய அணியை ராகுல் டிராவில் மற்றும் விவிஎஸ் லக்‌ஷ்மண் இருவரும் ஒருநாள் முழுவதும் களத்தில் இருந்து விளையாடி சரிவில் இருந்து மீட்டிருப்பர். இந்தப் போட்டியில் இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கும். 0-1 என்ற கணக்கில் தொடரில் பின்னிலையில் இருந்த இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரையும் வெற்றிருக்கும்.

வாஷிங்டன் சுந்தர் 7, அஸ்வின் 3 விக்கெட்டுகள்..! நியூசி. 259க்கு ஆல் அவுட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த இரண்டு போட்டிகளில் ராகுல் டிராவிட் 2003 ஆம் ஆண்டில் பரபரப்பான ஆட்டத்தில் 233 ரன்கள் அடித்தார். அதே 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் கேப்டனான விராட் கோலி இரண்டு இன்னிங்ஸிலும் (115 மற்றும் 141) சதம் அடித்து அசத்தியிருப்பார். மேலும், இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையும் படைத்தார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதலாவது போட்டி வருகிற நவம்பர் மாதம் 22 பெர்த்தில் தொடங்குகின்றன.

இந்திய அணி பயந்துவிட்டது; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024