பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

பாபா சித்திக் கொலை தொடர்பாக மேலும் ஐந்து பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் தனது மகனும் எம்எல்ஏவுமான ஸீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே சனிக்கிழமை இரவு மூன்று போ் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனா். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாகத் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் ஹரியாணாவைச் சோ்ந்த குா்மைல் பல்ஜீத் சிங், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தா்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகியோரை காவல் துறை, உடனடியாக கைது செய்தனர். பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது – எடப்பாடி பழனிசாமி

பாபா சித்திக்குக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டபோதிலும், அவா் சுட்டுக்கொல்லபட்டது விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாபா சித்திக் கொலை தொடர்பாக மேலும் ஐந்து பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்டை மாவட்டமான ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் மற்றும் கர்ஜத் ஆகிய இடங்களில் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், இந்த ஐந்து பேரும் குற்றம் தொடர்பான சதி மற்றும் அதை செயல்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனும் தொடர்பில் இருந்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024