பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset
RajTamil Network

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி!பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

அயர்லாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி அணி வெற்றிபெற்றது.

மொத்தமாக மூன்று லீக் போட்டிகளில் ஆடிய இந்திய அணி இரண்டில் வெற்றியும், ஆர்ஜென்டீனா அணிக்கு எதிரானப் போட்டியில் டிராவும் செய்திருந்தது.

மூன்று போட்டிகளின் முடிவில் 7 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று(ஜூலை 30) நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்த தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.

இந்தியா தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 11, 19-வது நிமிடத்தில் 2 கோல்கள் அடித்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 12 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் போட்டிகளில் அணிகள் ஒருவொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும்.

மேலும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

காலிறுதிஉ போட்டிகள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்றும், அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்றும், பதக்கச் சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

You may also like

© RajTamil Network – 2024