பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி அரையிறுதி; இந்தியா – ஜெர்மனி அணிகள் நாளை மோதல்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து – ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்திய அணி காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் 1-1 (4-2) என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா – ஜெர்மனி அணிகள் மோத உள்ளன.

நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்யும் முனைப்புடன் இந்தியா விளையாடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

முன்னதாக நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து – ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024