Friday, September 20, 2024

பாரீஸ் ஒலிம்பிக்: இந்த முறை நாம் அதிக பதக்கம் வெல்ல வேண்டும்- வீரர்களுக்கு கபில் தேவ் அறிவுரை

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், 'பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய அணியினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த முறை நாம் அதிக பதக்கம் வெல்ல வேண்டும். அது தான் முக்கியமானதாகும். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து இந்திய வீரர், வீராங்கனைகளும் அச்சமின்றி உங்களது முழு திறமையை வெளிப்படுத்துங்கள். இதுவே எனது அறிவுரையாகும். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறேன். இரட்டை இலக்கத்தில் பதக்கத்தை வெல்ல முடியும் என்று நம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் நடக்கும்"என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024