Saturday, September 21, 2024

பாரீஸ் ஒலிம்பிக்; தங்கப்பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு எருமை மாட்டை பரிசாக வழங்கிய மாமனார்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றார்.

கராச்சி,

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி சாதனை படைத்ததோடு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார். இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62-ம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது. ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் முகமது நவாஸ் எருமை மாட்டை பரிசாக வழங்கி உள்ளார். அவர்களின் ஊரில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கவுரவமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக நவாஸ் கூறியதாவது, எருமை மாட்டை பரிசளிப்பது என்பது ஒருவருக்கு அதிக செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். எங்கள் கிராமத்தில் இதுதான் நடைமுறை. அதனால், எனது மருமகனுக்கு எருமை மாட்டை பரிசளித்தேன் என கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024