Saturday, September 21, 2024

பாலத்தில் போட்டோ ஷூட்.. ரயில் வந்ததால் பள்ளத்தில் குதித்த தம்பதி

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

WATCH | பாலத்தில் போட்டோ ஷூட்.. ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதிவெளியான பரபரப்பு காட்சிகள்

வெளியான பரபரப்பு காட்சிகள்

தண்டவாளத்தில் போட்டோ ஷூட் எடுக்கும் போது ரயில் வந்ததால் புதுமண தம்பதி பாலத்தில் இருந்து கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உள்ள சமூக வலைதள மோகத்தால், பலரும் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு, அதில் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாலியில் உள்ள கோரம் காட் ரயில் பாலத்தில் ஒரு தம்பதி போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த பாலத்தின் மீது பயணிகள் ரயில் வர, என்ன செய்வதென்று தெரியாத அவர்கள் கீழே உள்ள 90 அடி பள்ளத்தாக்கில் குதித்தனர். உடனே அந்த ரயிலும் நின்றுவிட்டது.

விளம்பரம்

இதையும் படிக்க:
புரி ஜெகன்நாதர் கோயிலில் இவ்வளவு தங்கமா? 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பொக்கிஷ அறை!

பலத்த காயமடைந்த அந்த தம்பதியினரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, கணவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மனைவியும் அதிக காயங்களுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, அந்த தம்பதியினருக்கு ரயில் வருவதே கடைசி நேரத்தில் தான் தெரியவந்தது எனவும், அவர்கள் அந்த சமயத்தில் திடீரென குதித்ததாகவும் தெரிவித்தார்.

விளம்பரம்

A Couple Jumps From Rail Bridge Into 90-Feet Gorge As Train Arrives During Photo Shoot pic.twitter.com/G0KbnGhgZo

— Ravinder Devnani 🇮🇳 (@DevnaniRavinder) July 15, 2024

விளம்பரம்

மேலும் இந்த கோரம் காட் ரயில் பாலத்தில் புகைப்படங்கள் எடுக்கவும், ரீல்ஸ் எடுக்கவும் ஏராளமான மக்கள் வருவதால், அதிகம் விபத்துக்கள் நடப்பதாகவும், இந்த இடத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்த அங்கிருக்கும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Rajasthan

You may also like

© RajTamil Network – 2024