Saturday, September 21, 2024

பாலாற்றில் புதிய தடுப்பணை: சந்திரபாபு நாயுடு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, 4-வது முறையாக ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார்.

இந்தநிலையில், குப்பம் தொகுதியில் கொட்டும் மழையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

படித்த இளைஞர்களுக்கு அதிகவேலைவாய்ப்பை உருவாக்குவேன். மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும். பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும். குப்பர் ரெயில்நிலையத்தை பெங்களூரு, சென்னை செல்வதற்கான முக்கிய சந்திப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஊருக்கே தண்ணீர் தருவது என் பொறுப்பு, அதை பொன்னாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறினார். அதனை தொடர்ந்து சித்தூரில் ஹந்த்ரி-நீவா சுஜலா ஸ்ரவந்தி கால்வாய் திட்டத்தை ஆய்வு செய்தார்.

You may also like

© RajTamil Network – 2024