‘பா.ஜ.க.வும், காங்கிரசும் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி சாதிய, வகுப்புவாத சட்டமாக மாற்றிவிட்டன’ – மாயாவதி

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, லக்னோவில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சியினரும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அரசியலமைப்பின் நகல்களை காட்டுகிறார்கள். அவர்களின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருப்பதாகவே தெரிகிறது. பா.ஜ.க.வும், காங்கிரசும் அரசியலமைப்பு சட்டத்தை பல்வேறு திருத்தங்கள் மூலம் சாதிய, வகுப்புவாத மற்றும் முதலாளித்துவ சட்டமாக மாற்றியுள்ளனர்.

இது அம்பேத்கரின் சமத்துவ மற்றும் மதச்சார்பற்ற அரசியலமைப்பு கிடையாது. அரசியல் ஆதாயங்களுக்காக இந்திய அரசியலமைப்புடன் இவர்கள் விளையாடும் விதம் ஏற்புடையது அல்ல. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) இடஒதுக்கீடு சலுகைகள் வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அரசுகள் அமல்படுத்தவில்லை."

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024