Tuesday, September 24, 2024

பிகாரில் தயாராகும் ரஷிய ராணுவ வீரர்களுக்கான காலணிகள்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

பிகாரில் தயாராகும் ரஷிய ராணுவ வீரர்களுக்கான காலணிகள்!ரஷிய ராணுவ வீரர்கள் அணியும் பூட்ஸ் வகைக் காலணிகள் பிகாரில் தயாரிக்கப்படுகிறது.கோப்புப் படம்

ரஷிய ராணுவ வீரர்கள் அணியும் பூட்ஸ் வகைக் காலணிகள் இந்தியாவின் பிகார் மாநிலத்திலிருந்து தயாரித்து அனுப்பப்படுகிறது.

ரஷியா – உக்ரைன் நாடுகளிடையே போர் நடைபெற்று வரும் வேளையில் ரஷிய ராணுவ வீரர்கள் பிகாரிலிருந்து தயாரிக்கப்படும் காலணிகளை அணிகிறார்கள் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

காம்பீட்டன்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் எனும் தனியார் நிறுவனம் தயாரிக்கும் பூட்ஸ் வகைக் காலணிகள், ரஷிய ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளான ஃப்ரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கும் காலணிகள் தயாரித்து ஏற்றுமதி செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் மேலாளரான ஷிபு குமார் ராய் பேசுகையில், “நாங்கள் ஹஜிபூரில் 2018-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். இங்கு தயாரிக்கப்படும் காலணிகள் ரஷியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த ஏற்றுமதி அனைத்தும் ரஷியாவிற்கு மட்டுமே செய்து வருகிறோம். ஐரோப்பிய நாடுகளுக்கும் எங்களின் ஏற்றுமதியைக் கொஞ்சமாக விரிவுபடுத்தி வருகிறோம். விரைவில், உள்நாட்டு சந்தையிலும் விற்பனையைத் தொடங்குவோம்.

எங்கள் நோக்கமே உள்ளூர் வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதாகும். இங்கு பணிபுரியும் 300 தொழிலாளர்களில் 70% பெண்களே” என்றார்.

ரஷிய ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்புத் தேவைகள் குறித்துப் பேசிய அவர், “ஷூக்கள் இலகுவான எடையிலும், சறுக்கும் தன்மை இல்லாமலும், -40 டிகிரி குளிரைத் தாங்கும்படியும் இருக்கவேண்டுமென அவர்களின் தேவைகளுக்கேற்பப் பாதுகாப்பு கருதி தயாரிக்கப்படுகிறது” என்றும் கூறினார்.

அந்த நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் மார்க்கெட்டிங் துறைத் தலைவரான மஷூர் பல்லுமியா பேசுகையில், “சர்வதேச பிராண்டுகளுக்கு இணையான தரமான காலணிகளை உருவாக்குவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம். சமீபத்தில் ஒரு பெல்ஜிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024