பிகார் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

பிகார் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி!ரூபாலியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பீமா பாரதியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இடைத்தேர்தல் வெற்றி அறிவிப்புக்குப் பிறகு சங்கர் சிங்இடைத்தேர்தல் வெற்றி அறிவிப்புக்குப் பிறகு சங்கர் சிங்

பிகார் மாநிலம் ரூபாலி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றார்.

ரூபாலியில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பீமா பாரதியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

பிகார் மாநிலம் ரூபாலி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பீமா பாரதி, ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு மாறியதால், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் பீமா பாரதி (3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்) போட்டியிட்டார். ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கலாதர் பிரசாத் மண்டல் களமிறங்கினார். இவர் சமீபத்தில் முதல்வர் நிதீஷ் குமார் முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தவர்.

ஜூலை 10ஆம் தேதி இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

காலை 8 மணிமுதல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட கலாதர் பிரசாத் மண்டல் 6வது சுற்றுவரை முன்னணியில் இருந்தார்.

பின்னர், யாரும் எதிர்பார்க்காத வகையில், பின்னடைவில் இருந்த சுயேட்சை வேட்பாளர் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்றார். இறுதியில் 68,070 வாக்குகள் பெற்று சங்கர் சிங் வெற்றி பெற்றார்.

ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கலாதர் பிரசாத்தை விட 8,246 வாக்குகள் கூடுதலாக அவர் பெற்றார். இத்தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பீமா பாரதி டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார்.

இது தொடர்பாக பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் சக்தி யாதவ், தேர்தல் முடிவுகள் வியப்பளிக்கின்றன. ஓபிசி பிரிவைச் சேர்ந்த இரு வேட்பாளர்களும் தோல்வி அடைந்துள்ளனர். அவர்கள் பாஜக கொள்கைகளுக்காக பணியாற்றினர். பிற்படுத்தப்பட்ட மக்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது எனக் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024