Thursday, October 31, 2024

பிக் பாஸ் 8: முத்துக்குமரனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த செளந்தர்யா!

by rajtamil
Published: Updated: 0 comment 0 views
A+A-
Reset

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆள்மாறாட்டம் போட்டி விளையாடும்போது முத்துக்குமரனின் தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து செளந்தர்யா பேசியது சர்ச்சையாகியுள்ளது.

எதையும் தீர யோசித்து விளையாடும்போக்கைக் கொண்ட முத்துக்குமரனுக்கு திருமணம் நடக்குமா? நடந்தால் அதற்கும் ஒரு வியூகம் தானா? என தனிப்பட்ட வாழ்க்கையை கேலி செய்யும் வகையில் பேசியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆள்மாறாட்டம் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியளரைப் நடிக்க வேண்டும். இதன்மூலம் தான் சொல்ல விரும்புவதை சுட்டிக்காட்ட விரும்புவதை நடிப்பின் மூலம் அந்த நபருக்கு சுட்டிக்காட்டலாம்.

இரண்டாவது நாளான இன்றும் ஆள்மாறாட்டம் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று சுனிதாவாக செளந்தர்யாவும், அன்ஷிதாவாக ஜாக்குலினும் நடித்து அசத்தினர்.

இதில் முத்துக்குமரனாக விஜே விஷால் நடிக்கிறார். முத்துக்குமரன் ரஞ்சித் போன்று நடிக்கிறார். ரஞ்சித் ஜெஃப்ரி போன்று நடிக்கிறார்.

எல்லை மீறிய செளந்தர்யா

இந்நிலையில், முத்துக்குமரனாக நடிக்கும் விஜே விஷால், செளந்தர்யா, ஜாக்குலினுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுகிறார். முத்துவாகவே விஜே விஷால் நடித்துக்கொண்டிருக்கும்போது, சமையல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில், எதிர்காலத்தில் என் மனைவிக்கு சமையலில் நான் உதவி செய்யலாம் இல்லையா? எனப் பேசுகிறார்.

அதற்கு பதிலளித்த செளந்தர்யா, உங்களுக்கு மனைவி வருவார்களா? எனக் கேட்கிறார். மனைவி வருவதும் வியூகம் தானா? மனைவியை வைத்தும் வியூகம்தான் அமைப்பீர்களா? அவர்களிடம் வியூகம் அமைத்து என்ன செய்வீர்கள்? திருமணமும் வியூகமாகத்தான் இருக்கும்போல என கேலியாகப் பேசுகிறார்.

அருகில் அமர்ந்திருப்பவர்கள் சிரிக்க, முத்து என்ன செய்வது என்று கூறிவிட்டு தனது உணவை சாப்பிடுகிறார்.

வெவ்வேறு பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் அந்த பாத்திரத்தின் மீதுள்ள வெறுப்பை வெளிப்படுத்துவதற்கு செளந்தர்யா தயங்குவதில்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: சுனிதாவாக நடித்து அசத்திய செளந்தர்யா!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024