Sunday, September 22, 2024

பின்லேடனின் நெருங்கிய உதவியாளர் பாகிஸ்தானில் கைது

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

பின்லேடனின் நெருங்கிய உதவியாளர் பாகிஸ்தானில் கைதுஅல்கொய்தா மூத்த தலைவரும், பின்லேடனின் நெருங்கிய உதவியாளருமான அமின் அல் ஹக் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். புகைப்படம் – IANS

1960 ஆம் ஆண்டு ஆப்கனில் ஹக், 2001 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். மேலும் இவர், 1996 முதல் அல்-கொய்தா நிறுவனர் பின்லேடனின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அமின் அல் ஹக் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சராய் ஆலம்கிர் என்ற நகரத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறையின் அடிப்படையிலான நடவடிக்கையின் போது பயங்கரவாதி கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜி உஸ்மான் அக்ரம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அமின் அல் ஹக் பாகிஸ்தானில் பெரிய அளவில் பயங்கரவாதத் திட்டத்தைத் அரங்கேற்றவிருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் ஹக்கிற்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. கைதான ஹக் 2021 இல் ஆப்கானிஸ்தானில் காணப்பட்டார். பாகிஸ்தானின் அடையாள அட்டையும் அவரிடம் உள்ளது. அதில் லாகூர் மற்றும் ஹரிபுரின் முகவரிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடன் 2011-ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024