Friday, September 20, 2024

பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தின் பாடலை வெளியிடும் விஜய்

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

நடிகர் விஜய் ‘அந்தகன்’ திரைப்படத்தின் முதல் பாடலை வரும் 24-ம் தேதி வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் 'அந்தகன்'. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

இதில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார்.

'அந்தகன்' படமானது நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்த நிலையில் , படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாக்கியிருந்த இப்படம், பிரசாந்துக்கு நல்ல கம் பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரசாந்த்.

A heartfelt Thank you to our dearest Thalapathy Vijay. I am delighted to share that he will be unveiling the much awaited promotional "The Andhagan Anthem" song on 24.7.24 Mark the date and get ready to groove! #TSP@actorprashanth@actorvijay@[email protected]/keoluOqudw

— Thiagarajan (@actorthiagaraja) July 22, 2024

'அந்தகன்' படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது. அந்தகன் ஆந்தெம் (anthagan anthem) என்கிற இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளனர்.

View this post on Instagram

A post shared by Sony Music South (@sonymusic_south)

Original Article

You may also like

© RajTamil Network – 2024