Sunday, September 22, 2024

பிரதமராக இன்று பதவியேற்கும் நரேந்திர மோடி… டெல்லி முழுவதும் 144 தடை!

by rajtamil
Published: Updated: 0 comment 19 views
A+A-
Reset

பிரதமராக இன்று பதவியேற்கும் நரேந்திர மோடி… டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு!பிரதமர் மோடி பதவியேற்பு விழா

பிரதமர் மோடி பதவியேற்பு விழா

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று பதவியேற்க உள்ளார். தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை மின்னொளி அலங்காரங்களால் ஜொலிக்கிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, இன்று பிரதமர் பதவியேற்பு விழா அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து முடிந்துள்ளன.

விளம்பரம்

பிரதமர் பதவியேற்பு விழாவில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இலங்கை அதிபர் ரணில் விக்ரமிசிங்கே உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ள அழைப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு தலைவர்கள் தங்கும் முக்கிய சொகுசு ஹோட்டல்கள் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதையும் படிக்க:
இந்தியாவின் நீண்டகால பிரதமர்கள் வரிசையில் இணையும் மோடி!!!

பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் தலைநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றிலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஐந்து கம்பெனி துணை ராணுவப் படைகள், NSG கமாண்டோக்கள் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலம் டெல்லி நகரம் கண்காணிக்கப்படுகிறது.

விளம்பரம்

பதவியேற்பு விழா நடைபெறும் இடத்தைச் சுற்றி சுமார் 2,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியை கண்காணிக்க 500க்கும் மேற்பட்ட சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மத்திய டெல்லிக்கு செல்லும் பல சாலைகள் இன்று மூடப்படலாம் அல்லது போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக சுமார் 1,100 போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்றும், நாளையும் பாரா-கிளைடர்கள், மைக்ரோலைட் விமானங்கள், ரிமோட் பைலட் விமானங்கள், ஏர் பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் தமிழக பெண் லோகோ பைலட் – யார் அவர் தெரியுமா?

இரவு 7.15 மணிக்கு விழா தொடங்கியதும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்குப் பிறகு விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை சமையலறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு உணவுகள் விருந்தளிக்கப்படும்.

இதனிடையே, பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழ்கள் இன்னும் வரவில்லை என்று முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதேபோல், அழைப்பு விடுக்கப்பட்டாலும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
delhi
,
oath
,
PM Narendra Modi
,
President Droupadi Murmu

You may also like

© RajTamil Network – 2024