Saturday, September 21, 2024

‘பிரதமரின் திறமையின்மை…’ – முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு குறித்து ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

புதுடெல்லி,

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூன் 23-ந்தேதி(இன்று) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே சமீபத்தில் வெளியான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளில் குளறுபடி மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது பிரதமரின் திறமையின்மையை காட்டுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உயிரியல் ரீதியில் பிறக்காத பிரதமர் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களின் திறமையின்மையால், தினந்தோறும் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது முதுநிலை நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

No day is complete without news of cancellation of an exam because of the total incompetence of the non- biological PM and the people around him. The latest exam to be put off is NEET-PG, which was scheduled to be held tomorrow

— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 22, 2024

You may also like

© RajTamil Network – 2024